×

நரம்பு வலியிலிருந்து விடுதலை..!

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடலில் ஓடும் நரம்புகள்தான் நம்மை இயக்கும் கேபிள்கள். நம் உடல்தான் என தன்னை உணர்வதும் அதில் ஏதும் மாற்றங்கள் ஏற்படும்போது அதை உணரச்செய்வதும் நரம்புகள்தான். எப்போதும் விழிப்பாய் இருக்கும் நரம்பணுக்களே நம்மை உயிர்ப்பாய் வைத்திருக்கிறது. தொடு உணர்வு முதல் இருப்புணர்வு வரை நம்மை நாமாக வைத்திருக்கும் இந்த நரம்பில் சிறு வலி ஏற்பட்டாலும் அது உயிர்வலி கொடுக்கும். சிலருக்கு நரம்புவலி ஒரு தீராத வாதையாக இருக்கும். நரம்பு வலி என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதற்குத் தீர்வு என்ன என்பதை இங்கு
காண்போம்.ஆரோக்கியமான வலி ஏற்பிகள் தூண்டப்படுவதற்கு மாறாக, நரம்பியல் அமைப்பு அல்லது செயல்பாடுகளில் உண்டாகும் மாற்றங்களால் நரம்புகளில் ஏற்படும் வலியே நரம்புவலி எனப்படுகிறது.

முக்கிளைநரம்பு வலியின் வகைகள்

ஏற்படும் வலியின் வகைக்கேற்ப, முக்கிளை நரம்புவலி, பல வகைகளாகப் பகுக்கப்படும். அவை பின்வருமாறு: முக்கிளைநரம்பு வலி வகை 1 (TN1) : இது வரன்முறையான வகை. குத்திக் கிழிப்பது போன்ற வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது தொடர்ந்து இருக்காது. இது காரணம் அறியப்படாத நோய் ஆகும்.

முக்கிளைநரம்பு வலி வகை 2 (TN 2): இது இயல்பற்ற வடிவம். வலி தொடர்ந்து இருக்கும். வலி, துடிப்பு, எரிச்சல் ஏற்படும்.

அறிகுறிசார் முக்கிளைநரம்பு வலி (STN): மூளை தண்டுவட மரப்புநோய் போன்ற ஓர் அடிப்படையான காரணத்தினால் உண்டாகும் வலி.

நோயறிகுறிகள்

சம்பந்தப்பட்ட நரம்பு செல்லும் பாதையில் திடீரென ஏற்படும் குத்திக் கிழிக்கும் வலியே இதன் முக்கிய அறிகுறியாகும். இது நரம்பில் உண்டாகும் எரிச்சல் அல்லது சிதைவால் ஏற்படுகிறது. சிதைந்த நரம்பு செல்லும் பாதையில் அதிக உணர்திறன் உண்டாவதால் தொடுதல் அல்லது அழுத்தம் வலியாக உணரப்படுகிறது.நரம்புப்பாதையில் உணர்ச்சியின்மை அதே நரம்பு பரவி இருக்கும் தசையில் பலவீனம் அல்லது முடக்குவாதம் உண்டாதல்.

காரணங்கள்

நரம்புவலிக்கான காரணங்களில் அடங்குவன:

வேதியியல் எரிச்சல்

நீடித்த சிறுநீரகக் குறைபாடு

நீரிழிவு

அக்கி, எச்.ஐ.வி, லைம் நோய், மேகநோய் போன்ற தொற்றுக்கள் அருகில் உள்ள எலும்புகள், தசைநார்கள், இரத்தக்குழாய்கள் அல்லது கட்டிகளால் நரம்புகளின் மேல் அழுத்தம் ஏற்படுதல்.

காயம் (அறுவைசிகிச்சை உட்பட நோய் கண்டறிதல்

சில வேளைகளில் நரம்புவலியைக் கண்டறிதல் கடினம். கீழ்க்காணும் சோதனைகளால் அதைக் கண்டறியலாம்:

லேசர் தூண்டாற்றல்கள்

தோலில் உள்ள தேர்வு செய்யப்பட்ட வெப்ப நரம்பணு ஏற்பிகளை தூண்டும்போது உண்டாகும் புறணி பதில்வினையை அளக்க லேசர் தூண்டாற்றல்கள் (LEPs) பயன்படுத்தப்படுகின்றன. A-டெல்ட்டா மற்றும் C கட்டற்ற நரம்பு ஓரங்களைத் தேர்ந்து, செயலூக்கப்படுத்துவதற்காக லேசரால் கதிரியக்க வெப்பத் தூண்டல் துடிப்புகளை வெளியிட முடியும். அது குறிப்பாக வலியையும் வெப்பப்பாதைகளையும் குறிவைத்து புறணி பதில்வினைகளை அளக்கிறது.

தோல்நரம்புமுடிச்சு பாதைகளில் உள்ள நுண்ணிய சிதைவுகளையும் ஒரு மருத்துவரால் இதைக்கொண்டு இனங்காண முடியும். அசாதாரண LEP, நரம்பு வலியை வலுவாகச் சுட்டிக்காட்டுகிறது. இயல்பான LEP, தெளிவற்றதாகும். LEP-கள், அதி உணர்திறன் கொண்டவை. நடு மற்றும் புற நரம்பு மண்டலச் சிதைவுகளை இவற்றைக் கொண்டு உறுதியாக மதிப்பிட முடியும்.

தோல்திசு ஆய்வு

அண்மையில் இயக்க ஏற்பிகளையும் அவற்றின் மூளைக்கு செய்தி எடுத்துச் செல்லும் நரம்புகளையும் ஆராய தோல் திசு ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில ஆய்வு மையங்களிலேயே இவ்வசதி இருந்தாலும் தோல்திசு ஆய்வு ஓர் எளிய, குறைந்த அளவே துளையிட்டுச் செய்யும் முறையாகும். உள்-மேல் தோல் நரம்பிழைகளின் (IENF) அடர்த்தியை அளவிடுவதன் மூலம், C நரம்பிழைகள் மற்றும் A-டெல்ட்டா நரம்பிழைகளை அளவிட தோல் திசு ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. நரம்பு நோய் உள்ள பலருக்கு உள்-மேல் தோல் நரம்பிழை இழப்பு காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

நோய் மேலாண்மை

மருந்துகளாலும் அறுவை சிகிச்சையின் மூலமும் மருத்துவம் அளிக்கப்படுகிறது.

வலிப்படக்கி மருந்துகள்

நரம்புப் பாதைகளை அடைக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. நரம்பு வலிக்கு டிரைசைக்ளிக் ஆன்டிடிப்ரசன்டுகள் பொதுவாக பலன் அளிக்கின்றன.

அறுவைசிகிச்சை

பாதிக்கப்பட்ட நரம்பைத் தூண்ட நரம்பு மேம்பாட்டு அறுவைச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. முதுகுப்புற வேரில் மின்முனைகள் கவனமாக வைக்கப்பட்டு தோலடி நரம்புத் தூண்டல் மூலமாகக் குறிக்கப்பட்ட நரம்புப் பாதை தூண்டப்படுகிறது.

தொகுப்பு: லயா

The post நரம்பு வலியிலிருந்து விடுதலை..! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!